Skip to main content

Posts

Showing posts from May, 2022

லவ் மார்க்கெட்டிங் - 1

வாழ்க்கை பசுமையே இல்லாம ரொம்ப காஞ்சு போய் என்னடா வாழ்க்கை இதுங்கற மாறி போயிட்டு இருந்தது. கிட்டத்தட்ட விண்ணை தாண்டி வருவாயா சிம்பு மாதிரி தான் என் வாழ்க்கையும். ஆனா நான் சினிமால இல்ல, நான் ஒரு சேல்ஸ் எக்ஸ்சிக்யூடிவ், ஃபீல்ட் வொர்க் தான் என்னோடது, ஏ.சி ரூம், கேஃபே, பர்த்டே பார்டி, ஃபன் கேம்ஸ்னு எதுவும் கிடையாது. அலையனும் நாய் மாரி. அப்போது ராமை ஒரு கார் கடந்து சென்றது, அதன் ஜன்னல் வழியே ஒரு நாய் தலையை நீட்டி இவனை பரிதாபமாக பார்த்துக்கொண்டே சென்றது. ஹும் நாய்லாம் கூட சொகுசா தான் வாழுது. ஆனா நம்ம நெலம!  ஏதோ பெரிய கார்போரேட் கம்பெனி ஓட எக்ஸ்சிக்யூடிவ் லாம் கிடையாதுங்க நான், அழகு சோப்பு கம்பெனினு ஒரு உப்புமா கம்பெனி. வீடு வீடா போய் கதவ தட்டி, இந்த சோப்ப வாங்கிக்கோங்க உங்க அழகு கூடும், தண்ணில கூட கரையாது பல மாசம் சோப்பு பில் மிச்சம்'னு பல பொய்ய சொல்லி விப்பேன்.  அப்படி மாசம் முழுக்க வித்தா எவ்வளவு விக்கும்னு நினைக்குறீங்க சுமாரா பதினஞ்சுல இருந்து இருபது வர தீரும். என் டார்கெட் எவ்வளவு தெரியுமா? அஞ்சு! ஆமாங்க வெறும் அஞ்சே அஞ்சு தான். ஏன்னா என் கம்பெனி ஓட ரேன்ஜ் அவளோதான். அவனுங்களுக்க...